/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் கடன் குறித்த விளக்கம்: விவசாய சங்கம் கண்டனம்
/
பயிர் கடன் குறித்த விளக்கம்: விவசாய சங்கம் கண்டனம்
பயிர் கடன் குறித்த விளக்கம்: விவசாய சங்கம் கண்டனம்
பயிர் கடன் குறித்த விளக்கம்: விவசாய சங்கம் கண்டனம்
ADDED : ஜூன் 10, 2025 11:14 PM
பல்லடம்:
பயிர்க்கடன் குறித்து கூட்டுறவுத்துறை அளித்துள்ள விளக்கத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
'சிபில் ரிப்போர்ட்' அடிப்படையில் மட்டுமே அனைத்து வகையான விவசாயக் கடன்களை பெற முடியும் என, கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால், விவசாயிகள் பயிர் கடன் பெறுவது பாதிக்கப்படும் என்றும், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இந்த அறிவிப்பு உள்ளது எனவும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியது.
இதனை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை இதற்கான விளக்கம் அளித்துள்ளது. அதில், வேறு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற்றுள்ளார்களா என்பதை பார்ப்பதற்காக மட்டுமே 'சிபில் ரிப்போர்ட்' முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியே இது போன்ற நிபந்தனைகளை விதிக்கவில்லை. இவ்வாறு இருக்கும் போது, தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் தன்னிச்சையாக விவசாயிகளுக்கு இந்த நிபந்தனையை விதிப்பது யாருக்காக? என்ற கேள்வி எழுகிறது.
இந்த அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் இந்த அறிவிப்பு விளக்கம் ஏற்புடையதல்ல. இதனால், தமிழக அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இதைவிடுத்து, காரணம் கூறி சமாளிக்கும் போக்கை கூட்டுறவுத் துறை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.