/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழி தோண்ட வெடி பொருள்; வீட்டில் விரிசல் குறித்து விசாரணை
/
குழி தோண்ட வெடி பொருள்; வீட்டில் விரிசல் குறித்து விசாரணை
குழி தோண்ட வெடி பொருள்; வீட்டில் விரிசல் குறித்து விசாரணை
குழி தோண்ட வெடி பொருள்; வீட்டில் விரிசல் குறித்து விசாரணை
ADDED : ஏப் 15, 2025 11:49 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 59வது வார்டு கோவில்வழி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதில் பாறைக் காலனி என்ற பகுதி வழியாக குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை குழி தோண்டும் பணியின் போது திடீரென கற்களும் மண்ணும் பறந்து மேரி என்பவர் வீட்டில் விழுந்தது.
இதனால், வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்தது. தகவல் அறிந்து நல்லுார் போலீசார் விசாரித்தனர். பாறையாக உள்ள பகுதியில் குழி தோண்டுவதற்கு வெடி பொருள் பயன்படுத்தியது தெரிந்தது.
குழி தோண்ட வெடி பொருள் பயன்படுத்தியது குறித்து எந்த முன்னறிவிப்பும் தரவில்லை. இந்த சம்பவத்தில் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், இது குறித்து விசாரிக்க பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த நிறுவன ஊழியர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.