/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
/
ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : மார் 05, 2024 01:10 AM

திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று, சங்க அலுவலகத்தில் நடந்தது.
ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவனத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சங்க தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பொது செயலாளர் திருக்குமரன். பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் குமார் துரைசாமி முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சர்வதேச சந்தை வாய்ப்புகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, மறுசுழற்சி ஆடைகள் உற்பத்தி வழிமுறைகள், 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி மற்றும் அதன் எதிர்பார்ப்புகள் குறித்து, சங்க நிர்வாகிகள் பேசினர். உறுப்பினர்கள், தங்களது வர்த்தக ரீதியான தேவைகளுக்கு, சங்கத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

