ADDED : அக் 18, 2024 06:41 AM

திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், 274 வது செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ரத்தன் டாடா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தில் இணைந்துள்ள புதிய ஏற்றுமதியாளர்களுக்கு, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், உறுப்பினர்களை வரவேற்று பேசினர். அதனை தொடர்ந்து, தற்போதைய ஏற்றுமதி வர்த்தகம், சர்வதேச போர் சூழல், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக பாதுகாப்பு, மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.