/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர்கள் தரச்சான்று பெற ஒப்பந்தம்! 'ராப்' நிறுவனத்துடன் கையெழுத்து
/
ஏற்றுமதியாளர்கள் தரச்சான்று பெற ஒப்பந்தம்! 'ராப்' நிறுவனத்துடன் கையெழுத்து
ஏற்றுமதியாளர்கள் தரச்சான்று பெற ஒப்பந்தம்! 'ராப்' நிறுவனத்துடன் கையெழுத்து
ஏற்றுமதியாளர்கள் தரச்சான்று பெற ஒப்பந்தம்! 'ராப்' நிறுவனத்துடன் கையெழுத்து
UPDATED : ஜன 13, 2026 07:30 AM
ADDED : ஜன 13, 2026 06:01 AM

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு, 'ராப்' (WRAP) தரச்சான்று பெறுவது தொடர்பாக, அந்நிறுவனத்துடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட, வளர்ந்த நாடுகளுடன் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் செய்ய, புவிமாசு இல்லாதஉற்பத்தி என்பதற்கான தரச்சான்று பெறுவது அவசியமாகிறது.
எனவே, 'ராப்' தரச்சான்று பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. ஒப்பந்தத்தால் ஏற்படும் பயன் குறித்து நிர்வாகிகள் விளக்கி பேசினர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்சுப்பிரமணியன்:
திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை தலைநகராக மட்டுமல்லாமல், சமூக பொறுப்பு மற்றும் நீடித்த நிலையான பசுமை சார் விதிகளிலும் முன்னணி மாவட்டமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் 44,747 கோடி ரூபாய்க்குஏற்றுமதி நடந்துள்ளது.
இது, இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 58 சதவீதம். 'ராப்' சான்றிதழ் வாயிலாக திருப்பூர் தொழிற்சாலைகளின் தரநிலை நம்பகத்தன்மை மற்றும் சமூக இணக்கத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வரும். இந்தியாவிலேயே தற்போது, 350 நிறுவனங்கள் மட்டுமே 'ராப்' சான்றிதழைப் பெற்றுள்ளன.
அதில், 150க்கும் அதிகமான நிறுவனங்கள் திருப்பூரை சேர்ந்தவை. நாட்டிலுள்ள வேறு எந்த உற்பத்தி மையமும் இந்த அளவிலான சாதனையை எட்டவில்லை. இது திருப்பூர் சமூக இணக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து, முன் மாதிரி தொழில் நகரமாக இயங்கி வருகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.
இணை செயலாளர் குமார் துரைசாமி:
அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு ராப் சான்றிதழ் அவசியம், மேலும் புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் பெற அத்தியாவசியமாகவும் இருக்கிறது.
ஐரோப்பிய வாடிக்கையாளர்கள், பல்வேறு சான்றிதழ்களை ஏற்றாலும், அமெரிக்கர்கள் பெரும்பாலும் ராப் சான்றிதழை மட்டுமே விரும்புகின்றனர்.
எதிர்காலத்தில் அமெரிக்க வரி விதிப்பு சூழ்நிலை மாற்றம் அடைந்தால் இந்திய ஏற்றுமதி துறை முன்னிலை பெறும். ராப் சான்றிதழ் திருப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
பொதுச் செயலாளர் திருக்குமரன்:
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சங்க உறுப்பினர்கள் ராப் சான்றிதழை எளிதாகப் பெற முடியும். இது நிறுவனங்களின் தரநிலைகளை உயர்த்தி, உலக சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்க உதவும்.
ராப் தலைவர் அவெடிஸ் செபேரியன்:
உலகளாவிய வர்த்தகத்தில் தற்போது நிலவும் நிச்சயமின்மை மற்றும் திடீர் கொள்கை மாற்றங்கள் ஏற்றுமதி துறைக்கு சவாலாக இருக்கின்றன. அமெரிக்க இறக்குமதி வரி உயர்வால் இந்திய ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராப் சான்றிதழ் பெற்ற தொழிற்சாலைகள், அமெரிக்க பையர்களுக்கு அதிக நம்பகத்தன்மை அளிக்கும். வர்த்தகத்தை விரைந்து முடிக்க உதவியாக இருக்கும். ஐரோப்பிய சந்தைகளில், அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை பூர்த்தி செய்வதாகவும் இருக்கும்.

