/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல பாசன காலம் நீட்டிப்பு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
/
மண்டல பாசன காலம் நீட்டிப்பு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டல பாசன காலம் நீட்டிப்பு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டல பாசன காலம் நீட்டிப்பு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 15, 2025 09:46 PM
உடுமலை,; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் பாசன காலத்தை வரும், ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 94,632 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த மண்டல பாசனத்துக்காக, திருமூர்த்தி அணையிலிருந்து, ஜன., 29ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மொத்தம் ஐந்து சுற்றுகளாக, 135 நாட்களுக்குள், 10,300 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
பாசன காலத்தில், பிப்., மாதத்தில், சர்க்கார்பதி நீர் மின் நிலைய பழுது, நீர் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால், போதியளவு தண்ணீர் வழங்க முடியவில்லை.
இதையடுத்து இரு மாவட்ட விவசாயிகளும், ஐந்தாம் சுற்றுக்கு தண்ணீர் வழங்கும் போது, நீர் நிறுத்தப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், பாசன காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். திட்டக்குழு சார்பிலும், அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, பாசன காலத்தை, வரும், ஜூலை 5ம் தேதி வரை, நீட்டிப்பு செய்து தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.