/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர், போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
/
டிரைவர், போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜன 31, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், போலீசார் மற்றும் டிரைவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
உடுமலை போலீஸ், அரவிந்த் கண் மருத்துவமனை, வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் சாய் ஹியரிங் எய்ட் சார்பில், போலீசார் மற்றும் டிரைவர்களுக்கான இலவச கண், காது பரிசோதனை முகாம் நடந்தது.
எஸ். எம்., டிராவல்ஸ் தலைவர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஐ.,கள் ராமேஸ்வரன், கண்ணன், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், உடுமலைப் பகுதியிலுள்ள பள்ளி, கல்லுாரி வாகனங்களின் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.