/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
/
பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 10, 2025 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. மருத்துவர் சினேகலதா தலைமையில், செவிலியர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசோதனை செய்தனர். பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வேல், முகாமை துவக்கி வைத்தார். ஆறு முதல் பிளஸ் 2 வரை உள்ள, 960 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர் சிகிச்சை பெற தேவைப்படுவோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர் மகேந்திரபிரபு, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.