/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் வரும் 16ல் கண் பரிசோதனை முகாம்
/
அரசு பள்ளியில் வரும் 16ல் கண் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 12, 2025 11:17 PM
உடுமலை; பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வரும் 16ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவ மையம், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில், இலவச கண் பரிசோனை முகாம், வரும் 16ம் தேதி நடக்கிறது.
முகாம் பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இம்முகாமில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும், இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கென முகாமிற்கு வருவோர், அவர்களுக்கான இருதய நோய், ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமாவிற்கு மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றும், அவர்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளையும் எடுத்து வர வேண்டும்.