ADDED : ஜூலை 27, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ரீடு' தொண்டு நிறுவனம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, திருப்பூர் அடுத்த தேவம்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. கிராம பொதுமக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமை, திட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியா துவக்கி வைத்தார். நைனான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
கிராம மக்கள் 50 பேர்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 60 பேர் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். ஒருங்கிணைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.