/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் பரிசோதனை; 80 பேர் பங்கேற்பு
/
கண் பரிசோதனை; 80 பேர் பங்கேற்பு
ADDED : நவ 09, 2025 11:49 PM

திருப்பூர்: பழனிச்சாமி பொன்னம்மாள் அறக்கட்டளை, சக் ஷம், தி ஐ பவுண்டேசன், குமரன் ரோட்டரி, லயன்ஸ் இன்டர்நேஷனல், தம்பி நண்பர்கள் அமைப்பு, துளசி பார்மஸி சார்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப், பூச்சக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
நேற்று கண் பரிசோதனை முகாமை, கோவில் நிர்வாகி, ராஜா முத்துரத்தினம் துவக்கி வைத்தார். 80 பேர் பங்கேற்றனர்; 15 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
கலிக்கம் சொட்டு மருந்து முகாமில், 100 பேர் பங்கேற்றனர். இலவசமாக ரத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. அடுத்த முகாம் டிச. 14 ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.

