/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் பரிசோதனை 100 பேருக்கு பயன்
/
கண் பரிசோதனை 100 பேருக்கு பயன்
ADDED : டிச 28, 2025 07:01 AM

திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு -2 சார்பில் அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
ஆறாம் நாளான நேற்று, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். அதில், கண்புரை உள்ள 10 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவக்குழு உதவியாளர் ராஜா கூறினார்.

