ADDED : ஏப் 14, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க., சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட அலுவலக வளாகத்தில் முகாமை மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். வர்த்தக அணி செயலாளர் வடுகநாதன், விவசாய அணி செயலாளர் ஆறுமுகம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது. கண்ணாடி தேவைப்பட்டோருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

