/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இமயம் பேப்ரிக்ஸ்-ல் கலர் கலராக 'பேப்ரிக்'
/
இமயம் பேப்ரிக்ஸ்-ல் கலர் கலராக 'பேப்ரிக்'
ADDED : ஆக 01, 2025 10:42 PM
திருப்பூர்; குறு, சிறு மற்றும் நடுத்தர பின்னலாடை உற்பத்தியாளருக்கு தேவையான, புதுரக 'பேப்ரிக்' துணிகளை வழங்கி வருகிறது, 'இமயம்' பேப்ரிக்ஸ்.
சூரத், லுாதியானா மற்றும் சீனா உற்பத்தியாளரிடம் இருந்து 'பேப்ரிக்' கொள்முதல் செய்து, திருப்பூர் மட்டுமல்ல, தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுவை என, தென்னிந் தியா முழுவதும் பேப்ரிக் வர்த்தகம் செய்து வரு கின்றனர்.
குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்து, விரிவுபடுத்தப்பட்ட வகையில், வியாபாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரின் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், இமயம் பேப்ரிக்ஸ் வாடிக்கையாளராக மாறியுள்ளனர்.
அங்கேரிபாளையம் மெயின் ரோடு மற்றும் சிவன் தியேட்டர் ரோடு பகுதிகளில், மிகப்பெரிய ஷோரூம்கள் வாயிலாக. பேப்ரிக் விற்பனை களைகட்டியுள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் டிசைன்களில் எளிதாக 'பேப்ரிக்' கிடைக்கிறது.
இதன் நிர்வாக இயக்குனர் மருதாசல மூர்த்தி கூறுகையில், ''கடந்த, 20 ஆண்டுகளாக, பேப்ரிக் விற்பனை செய்து வருகிறோம்; பாலிகாட்டன், பாலிஸ்டர் ஆகிய பேப்ரிக் விற்பனை செய்கிறோம். தற்போது, 30க்கும் அதிகமான ரகங்களில், 10க்கும் அதிகமான கலர்களில் பேப்ரிக் சப்ளை செய்கி றோம். உற்பத்தியாளரின் தேவையை பூர்த்தி செய் யும் வகையில், அனைத்து ரக 'பேப்ரிக்' ரகங்களும் உள்ளன.
சாயமிடப் பட்ட பாலிய ஸ்டர் பேப்ரிக் விற்பதால், உற்பத்தியாளருக்கு சாயமிடும் வேலை குறைத்துள்ளது. எங்களிடம் பேப்ரிக் வாங்கி, உடனே உற்பத் தியை துவக்கலாம். அதா வது, 'ரெடி டூ கட்' என்ற வகையில், சேவையாற்றி வருகிறோம். பிராண்டட் நிறுவனங்கள் உட்பட, அனைவருக்கும் தரமான, நியாயமான விலையில், பேப்ரிக் சப்ளைசெய்கிறோம்,'' என்றார்.