sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 துணி, நுால், அசசரீஸ் கண்காட்சி ஐ.கே.எப். வளாகத்தில் இன்று துவக்கம்

/

 துணி, நுால், அசசரீஸ் கண்காட்சி ஐ.கே.எப். வளாகத்தில் இன்று துவக்கம்

 துணி, நுால், அசசரீஸ் கண்காட்சி ஐ.கே.எப். வளாகத்தில் இன்று துவக்கம்

 துணி, நுால், அசசரீஸ் கண்காட்சி ஐ.கே.எப். வளாகத்தில் இன்று துவக்கம்


ADDED : மார் 18, 2026 09:15 PM

Google News

ADDED : மார் 18, 2026 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஜவுளித்துறைக்கான புதுவகை நுாலிழைகள், துணிரகங்கள், அசசரீஸ் ரகங்களை காட்சிப்படுத்தும், 'ஒய்.எப்.ஏ., வர்த்தக கண்காட்சி - 2026, திருப்பூரில் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், விஷன் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில், வடமாநில ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், துணி, நுால் மற்றம் அசசரீஸ் கண்காட்சி நடத்தப்படுகிறது; அதன்படி, 28 வது துணி, நுால் கண்காட்சி, முதன்முறையாக திருப்பூரில் இன்று துவங்குகிறது.

திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், இன்று துவங்கி, மூன்று நாட்களுக்கு, தினமும் காலை, 10:00 முதல், இரவு, 7:30 மணி வரை நடக்கிறது. கண்காட்சியில், பல்வகை நுால்கள், துணி ரகங்கள், நார்வகைகள், 'டிரிம்ஸ்' வகைகள், அலங்கார ஜவுளி பொருட்கள், ஜவுளி சேவைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

'ஒய்.எப்.ஏ.,' என்ற தலைப்பில் துணி, நுால் மற்றும் அசசரீஸ் வர்த்தக கண்காட்சி -2026' துவக்க விழா இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன், கண்காட்சியை திறந்து வைக்கிறார். மேலும், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட தலைவர் சுனில் ஜூன்ஜூன் வாலா, சுந்தரராஜ், முருகேசன் உள்ளிட்ட முன்னணி நிறுவனத்தினர், தொழில்வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

கண்காட்சி அமைப்பாளர்கள் அவிேஷக் சர்மா, அங்கூர் கோயல் ஆகியோர் கூறியதாவது:

திருப்பூரில், கண்காட்சி நடக்கும் காலம் மிகவும் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனங்கள், கிறிஸ்துமஸ் ஆர்டர் விசாரணையை துவக்கியுள்ளனர். சீசன் ஆர்டர்களுக்கான, 'சாம்பிள்' தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வாங்க, இக்கண்காட்சி மிகவும் உதவியாக இருக்கும். கண்காட்சியில், 'அர்விந்த்', பிலோசா இன்டஸ்ட்ரிஸ், பல்லவா குரூப் என, முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தியாவின் 'நிட்வேர்' மற்றும் ஆடை ஏற்றுமதியில், திருப்பூர் நகரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கண்காட்சி நடத்தப்படுகிறது. நார், நுால் மற்றும் துணி சப்ளையர்கள் நேரடியாக, உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இணையும் தளத்தை உருவாக்குவது எங்களின் நோக்கம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us