/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோல்வியுற்ற திடக்கழிவு மேலாண்மை! பசுமை தீர்ப்பாய உத்தரவை பின்பற்ற வலியுறுத்தல்
/
தோல்வியுற்ற திடக்கழிவு மேலாண்மை! பசுமை தீர்ப்பாய உத்தரவை பின்பற்ற வலியுறுத்தல்
தோல்வியுற்ற திடக்கழிவு மேலாண்மை! பசுமை தீர்ப்பாய உத்தரவை பின்பற்ற வலியுறுத்தல்
தோல்வியுற்ற திடக்கழிவு மேலாண்மை! பசுமை தீர்ப்பாய உத்தரவை பின்பற்ற வலியுறுத்தல்
ADDED : மே 14, 2025 11:12 PM
திருப்பூர், ; திருப்பூர் மாநகராட்சியில் குப்பை கொட்டுவதற்கென பிரத்யேக இடமில்லாததால், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வந்தது. 'இது, சட்ட விரோதம்; இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, மாவட்டம் முழுமைக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி சார்பில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'தரம் பிரிக்கப்படாத குப்பையை பாறைக்குழியில் கொட்டுவதை மாநகராட்சி தவிர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
குப்பையை தரம் பிரித்து வாங்கவும், அதனை உரிய முறையில் வகைப்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாட்டுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பாறைக்குழியில் கொட்டப்பட்ட பல்வேறு வகை குப்பைகளை, உடனடியாக திரும்ப எடுக்க வேண்டும்.
உறுதியான மற்றும் அறிவியல் முறையில் திடக்கழிவுகளை கையாள்வது தொடர்பாக, குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தை, ஒரு மாத காலத்திற்குள் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்,' என சுட்டிக்காட்டியிருந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி உரிய விளக்கமும் அளிக்கவில்லை. 100 கிலோவுக்கு குப்பைக் கழிவுகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், 'பல்க் ஜெனரேட்டர்' என்ற அடிப்படையில் அவர்களே குப்பையை தரம் பிரித்து, அகற்ற வேண்டும். இதனையும், மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுக்கவில்லை.
வீடு, தனியார் நிறுவனங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற வழி காட்டுதலையும் வழங்கவில்லை. பல்வேறு தனியார் நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர்கள் பலரும் உள்ள நிலையில் அவர்களுடன் கலந்து பேசி, குப்பை அகற்றும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.