ADDED : ஏப் 22, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில், 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இளையராஜா, 43 என்பவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி படுத்த கோர்ட் ஆய்வு செய்தது.
அதில், சமர்ப்பிக்கப்பட்ட, அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரிந்தது. போலி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த இளையராஜா மற்றும் அதை தயாரிக்க உதவிய குமார் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கூடுதல் அமர்வு கோர்ட்டின் தலைமை எழுத்தர் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, இருவரையும் வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.