தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பூக்கள் விலை தொடர் சரிவு

பூக்கள் விலை தொடர் சரிவு

பூக்கள் விலை தொடர் சரிவு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: வரத்து சீராகியுள்ள நிலையில், விற்பனை சுறுசுறுப்பு இல்லாததால் திருப்பூரில் பூக்களின் விலை சரிவை சந்தித்துள்ளது.

புரட்டாசி மாத தொடக்கத்தில் மல்லிகை பூ 250 கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.900-க்கும் விற்பனையானது. தற்போது விற்பனை குறைந்துள்ளதால் 250 கிராம் ரூ.200-க்கும், கிலோ ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் முல்லை கிலோ ரூ.240, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.220 என விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து பூ விவசாயிகள் கூறுகையில், ‘புரட்டாசி மாதத்தில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் விற்பனை மந்தமாக உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையால் விவசாயிகள் அதிகளவில் பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பூக்களை அதிகளவில் இருப்பு வைக்க முடியாததால், உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us