sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மக்காச்சோளம் விலை வீழ்ச்சி விவசாயிகள் பெரும் கவலை

/

 மக்காச்சோளம் விலை வீழ்ச்சி விவசாயிகள் பெரும் கவலை

 மக்காச்சோளம் விலை வீழ்ச்சி விவசாயிகள் பெரும் கவலை

 மக்காச்சோளம் விலை வீழ்ச்சி விவசாயிகள் பெரும் கவலை


ADDED : பிப் 08, 2026 07:45 AM

Google News

ADDED : பிப் 08, 2026 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில், கறிக்கோழி வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. மக்காச்சோளம், கறிக்கோழிகளின் முக்கிய தீவனங்களில் ஒன்று.

இதற்காகவே, விவசாயிகள் பல நுாறு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுகின்றனர். இருப்பினும், கோழிகளுக்கான தீவன பற்றாக்குறை காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்தும் டன் கணக்கில் மக்காச்சோளம் தருவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், சமீப நாட்களாக, மக்காச்சோளம் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, பல்லடம் வட்டார விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

நல்லுார்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி கூறுகையில், ''கடந்த காலத்தில், குவிண்டால் ஒன்று, 2,300 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

'இந்த விலையே கட்டுப்படி ஆகாது என்பதால், கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.

ஆனால், சமீப நாட்களாக, கொள்முதல் விலை, குவிண்டால் ஒன்றுக்கு, 2,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us