sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 த.வெ.க.,வினர் ஆதரவு வேண்டாம் சத்துணவு பணியாளர்கள் 'காட்டம்'

/

 த.வெ.க.,வினர் ஆதரவு வேண்டாம் சத்துணவு பணியாளர்கள் 'காட்டம்'

 த.வெ.க.,வினர் ஆதரவு வேண்டாம் சத்துணவு பணியாளர்கள் 'காட்டம்'

 த.வெ.க.,வினர் ஆதரவு வேண்டாம் சத்துணவு பணியாளர்கள் 'காட்டம்'


ADDED : பிப் 08, 2026 07:54 AM

Google News

ADDED : பிப் 08, 2026 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய த.வெ.க.,வினரை, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் கூட்டமைப்பினர், 'கட்சியினர் ஆதரவு வேண்டாம்' எனக்கூறி, திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுதும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் கூட்டமைப்பினர், 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டமைப்பினர், ஐந்தாவது நாளாக நேற்றும், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், காலை, 10:00 மணி முதல், காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், போராட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்தனர். அருகிலேயே, காஸ் சிலிண்டர், அடுப்பு, பாத்திரங்களும் தயாராக இருந்தன. அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களில், 10 பேர், மதிய உணவு தயாரிக்கும் பணிகளை துவக்கியிருந்தனர்.

அப்போது, த.வெ.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் எனக்கூறி, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் கூட்டமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக சந்தித்துள்ளனர்.

'நீங்கள் வந்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் கட்சியினரின் ஆதரவை ஏற்க மாட்டோம். கட்சி வேறு; சங்கம் வேறு. நாங்கள் சங்கமாகவே போராடுவோம். உங்களின் ஆதரவு வேண்டாம்' எனக் கூறி, திருப்பி அனுப்பி வைத்தனர்.

த.வெ.க., மாநகர் மா வட்ட செயலர் பாலமுருகனிடம் கேட்டபோது, ''எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே உள்ள வாலிபர்கள் யாராவது தெரியாமல் சென்றிருக்கலாம். அதுகுறித்து எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us