ADDED : ஜன 01, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : கொங்கு வேளாளர், துாரன் குலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், இணைந்து திருப்பூரில் குடும்ப விழா நடத்தினர்.
கொங்கு வேளாளர் சமுதாயத்தில் உள்ள துாரன் குலத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் இணைந்து நெருப்பெரிச்சலில், 4வது ஆண்டு குடும்ப விழா கொண்டாடினர். பகவதி அம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த விழாவில் குத்து விளக்கேற்றி, குல தெய்வ வழிபாடு நடந்தது. சின்னசாமி வரவேற்றார். உடுமலை செல்வராஜ் குழுவினர் வள்ளி கும்மி நடனம் நடத்தினர். காராளன் கம்பத்தாட்டம், விருத்தப் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
துாரன் குலத்தின் சிறப்புகள், அதன் முன்னோடிகளின் வரலாறு ஆகியன குறித்தும் சிறப்பு பேச்சாளர்கள் பேசினர்.

