/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கபடி வீராங்கனையருக்கு வழியனுப்பு விழா
/
கபடி வீராங்கனையருக்கு வழியனுப்பு விழா
ADDED : ஜன 18, 2025 12:23 AM

திருப்பூர்; சேலத்தில் நடக்கும் மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும், திருப்பூர் மாவட்ட வீராங்கனைகளுக்கு வழியனுப்பு விழா நேற்று நடந்தது.
சேலத்தில், மாநில கபடி பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும், திருப்பூர் மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு வழியனுப்பு விழா மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளரும், மாவட்ட கபடி கழக செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம் முன்னிலை வகித்தார்.
கபடி கழக துணைத்தலைவர் ராமதாஸ், மாநகராட்சி கவுன்சிலர் செந்துார் முத்துகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர்கள் மகாலட்சுமி ரத்தினசாமி, பிரேமா மணி, கவுரவ உறுப்பினர் வெங்கடாசலம், துணை செயலாளர் வாலீசன், நடுவர்குழு கன்வீனர் சேகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
மாநில போட்டிக்கு செல்லும் வீராங்கனைகளுக்கு டிராக் ஷூ, பேக், சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை கபடி கழக நிர்வாகிகள் வழங்கினர்.
பங்கேற்றவர்கள் அணி பயிற்சியாளர் செந்தில்குமார், மேலாளர் வாசு மற்றும் வீராங்கனையருக்கு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பி வைத்தனர்.