/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில போட்டியில் பங்கேற்பு: கபடி அணிக்கு வழியனுப்பு விழா
/
மாநில போட்டியில் பங்கேற்பு: கபடி அணிக்கு வழியனுப்பு விழா
மாநில போட்டியில் பங்கேற்பு: கபடி அணிக்கு வழியனுப்பு விழா
மாநில போட்டியில் பங்கேற்பு: கபடி அணிக்கு வழியனுப்பு விழா
ADDED : நவ 08, 2025 12:55 AM

திருப்பூர்: மாநில போட்டியில் பங்கேற்க செல்லும் ஜூனியர் கபடி அணிக்கு, வழியனுப்பு விழா நடந்தது.
திருப்பூர் மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில், ஜூனியர் மாணவர் அணிக்கான பயிற்சி முகாம், திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் நடந்தது. மாவட்ட கபடி அணிக்கான தேர்வு போட்டியில் ஜொலித்த 16 பேருக்கு, பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில் இருந்து, 14 பேர் கொண்ட திருப்பூர் மாவட்ட அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த அணியினர் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாநில போட்டியில், திருப்பூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்கின்றனர்.
மாநில போட்டிக்கு செல்லும் அணிக்கு வழிய னுப்பு விழா குமரன் ரோடு, எஸ்.எஸ். ஓட்டலில், மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன், தலைவர் ரோலக்ஸ் மனோகரன், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
மாவட்ட கபடி கழக நடுவர் குழு சேர்மன் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கபடி கழக பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணைத்தலைவர் ராமதாஸ், பி.ஆர்.ஓ. சிவபாலன் முன்னிலை வகித்தனர். விளையாட்டு வீரர்களுக்கும் டிரேக் ஷீட், விளையாட்டு சீருடை,சூ செட், லோயர் போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாநில போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் வாலீசன்,தேர்வுக்குழு தலைவர் ருத்ரன்,வளர்ச்சிக்குழு ராஜூ, காரல்மார்க்ஸ், ரவிச்சந்திரன் மற்றும் செயற்குழுஉறுப்பினர்கள் பங்கேற்றனர்.

