ADDED : ஆக 04, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 73. மனைவி, மகன் உள்ளனர்.அவிநாசி, மங்கலம் ரோடு, காசிக்கவுண்டம்புதுாரில் பொன்னுசாமிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
நேற்று தோட்டத்திலுள்ள கிணற்றை சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டி சுத்தப்படுத்தி வந்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி, 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து நீரில்மூழ்கினார்.
அவிநாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் அவரை தேடினர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து, எட்டு மணி நேர போராட்டத்துக்கு பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.