/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உருவாகிறது உழவர் நல சேவை மையம்: வேளாண் உற்பத்தியை உயர்த்த திட்டம்
/
உருவாகிறது உழவர் நல சேவை மையம்: வேளாண் உற்பத்தியை உயர்த்த திட்டம்
உருவாகிறது உழவர் நல சேவை மையம்: வேளாண் உற்பத்தியை உயர்த்த திட்டம்
உருவாகிறது உழவர் நல சேவை மையம்: வேளாண் உற்பத்தியை உயர்த்த திட்டம்
ADDED : செப் 01, 2025 07:16 PM
உடுமலை:
முதல்வரின் உழவர் நல சேவை மையம் என்ற திட்டம், 2025-2026 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர் களின் திறன், உழவர் களுக்கு உதவியாக இருந்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 10 உழவர் நல சேவை மையம் அமைக்க ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில், 10 முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உழவர் நல சேவை மையம் அமைக்க, 30 சதவீதம் மானியமாக, 3 முதல், 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியதாவது:
இந்த மையங்களில், உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக் குரிய ஆலோசனை வழங்கப்படும்.
வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருள் மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனையும் வழங்கப்படும்.
சேவை மையங்கள் வாயிலாக, விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். இதன் வாயிலாக வேலையில்லா வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்கள் சுய தொழில் புரிய வாய்ப்பு ஏற்படும். திட்டத்தில் பயனடைய விரும்பும், 20 முதல், 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த, பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்த நபர்கள், வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன், கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின், மானிய உதவி பெற http://www.tnagrosmet.in.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு அவரவர் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.