/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய கால்வாய் நீர் மாசுபாட்டால் விவசாயிகள் பாதிப்பு
/
கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய கால்வாய் நீர் மாசுபாட்டால் விவசாயிகள் பாதிப்பு
கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய கால்வாய் நீர் மாசுபாட்டால் விவசாயிகள் பாதிப்பு
கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய கால்வாய் நீர் மாசுபாட்டால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : மார் 21, 2025 10:12 PM

உடுமலை; பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரையில், குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வாயிலாக, 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கால்வாய் கரையில் அமைந்துள்ள ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சி பகுதிகளிலிருந்து, குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், கட்டட கழிவுகளும் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், பாசனத்திற்கு செல்லும் குடிநீரில் கழிவுகள் கலந்து பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மக்களின் பொது பயன்பாடு, கால்நடைகளுக்கு குடிநீராகவும், பயன்படுவதால், பயன்படுத்த முடியாத அளவிற்கு நீர் மாசுபடுகிறது.
மேலும், கரையில் கொட்டப்படும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், கட்டட கழிவுகள் நீரில் கலந்து, மடைகள் அடைப்பு ஏற்படுவதோடு, பயிர்களும் பாதித்து வருகின்றன.
பாசனம், குடிநீருக்கு தரமற்றதாக, கழிவுகளால் கால்வாய் மாற்றப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து விவசாயிகள் புகார் அளித்தும், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனைத்தடுக்க, கால்வாய் கரைகளில், கம்பி வேலி அமைக்கவும், கழிவுகள் கொட்டும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கால்வாய் கரை மற்றும் ஜீப் டிராக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பாதுகாக்க வேண்டும்.