/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைநிலத்தில் சாண எரிவாயு கலன்: விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
/
விளைநிலத்தில் சாண எரிவாயு கலன்: விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
விளைநிலத்தில் சாண எரிவாயு கலன்: விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
விளைநிலத்தில் சாண எரிவாயு கலன்: விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
ADDED : ஜன 23, 2024 11:54 PM
உடுமலை:இயற்கை முறையில், நவீன சாண எரிவாயு கலன் அமைக்க, குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாகும். இங்குள்ள குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே, இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, கால்நடை வளர்ப்பின் வாயிலாக கிடைக்கும் சாணத்தை, காய்கறிகள் மற்றும் பயிர் வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதற்காக, சாணத்தை அதற்கான உரக்கிடங்குகளில் கொட்டி வைத்து, இயற்கை முறையில் நவீன சாண எரிவாயு கலனும் அமைத்துள்ளனர்.
இதனால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், சாண எரிவாயு கலன் அமைக்க, துறை ரீதியான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதில்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:
சாண எரிவாயு கலன் அமைக்க, மானியம் வழங்கி அரசு உதவ, கோரிக்கை இருந்து வந்தது. ஆனால், தற்போது விவசாயிகள், ரசாயன உரங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அதேபோல, உடுமலை சுற்றுப்பகுதியில், குறைந்த பரப்பில் மட்டுமே இயற்கை உரங்களைப்பயன்படுத்தி, பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானவர்கள் சாண எரிவாயு கலன் அமைக்க, எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.

