/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெண்டை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
/
வெண்டை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஜன 06, 2025 01:07 AM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு வட்டாரத்தில் வெண்டைக்காய் சாகுபடியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் வெண்டைக்காய் ஆண்டுதோறும் 40 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கிழக்கு பகுதியில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடாங்கிபாளையம் ஊராட்சி தேவராடிபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற விவசாயி கூறியதாவது:
விளைநிலத்தில், 40 சென்ட் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறோம். வெண்டைக்காய் விதைப்பு செய்து 45 நாட்கள் ஆகிறது. தற்போது காய் பறிப்பு துவங்கியுள்ளது. தற்போது வரை விதை நடவு, களையெடுத்தல், உரம், ஆட்கள் கூலி மற்றும் பராமரிப்பு என, 8 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. இது போக பறிப்பு காலத்தில் கூடுதல் செலவு ஏற்படும். வெண்டைக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
மொத்தமாக, ஒரு முறை 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ வெண்டைக்காய்க்கு, 30 ரூபாய் விலை கிடைக்கிறது. இந்த விலைக்கு குறையாமல் இருந்தால் மட்டுமே, விவசாயிக்கு லாபம் கிடைக்கும், என்றார்.

