ADDED : பிப் 05, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,: உடுமலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவை கூட்டம் நடந்தது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் வீரப்பன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார், பொருளாளர் பாலதண்டபாணி, உடுமலை தாலுகா தலைவர் ராஜகோபால், மாவட்ட குழு உறுப்பினர் அருண் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மத்திய அரசின் விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்தும், நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கையை கண்டித்தும், வரும், 8-ம் தேதி, மடத்துக்குளம் கணியூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.