/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் கோரிக்கை நிராகரிப்பு
/
விவசாயிகள் கோரிக்கை நிராகரிப்பு
ADDED : ஜூலை 21, 2025 11:28 PM
பொங்கலுார்; இருகூரிலிருந்து கரூர் வரை, எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. அதே வழியில், நாமக்கல் வரை, 70 கி.மீ., நீளத்துக்கு மீண்டும் ஒரு எரிவாயு குழாய் பதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே எரிவாயு குழாய் போடப்பட்ட நிலத்தின் மதிப்பு சரிந்ததால், அதனை வாங்க யாரும் தயாரில்லை. எனவே, ஏற்கனவே போடப்பட்ட எரிவாயு குழாயையும் அகற்றி, புதிதாக எரிவாயு குழாய் போடுவதையும் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என்று அவிநாசி பாளையத்தில் விவசாயிகள் ஒன்றரை மாதமாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ஸ்டாலின், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழாய்களை ரோட்டோரமாக கொண்டு செல்வோம்'' என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படாமல், நிராகரிக்கப்பட்டே கிடக்கிறது.