/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்
/
வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : மார் 16, 2025 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுர்: தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து, பொங்கலுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி கூறியதாவது:
தமிழக அரசு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு, 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை முறையாக விவசாயிகளுக்கு செல்கிறதா என அரசும், அரசு அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பயிர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது என்பதே நிதர்சனம். தெருநாய் கடியால் இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு அறிவிக்காதது ஏமாற்றமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.