ADDED : ஜூலை 11, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; விருகல்பட்டி வருவாய் கிராமத்தில், அடங்கல் மற்றும் உரிமைச்சான்று கிடைக்காததால், அப்பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை தாலுகா பெதப்பம்பட்டி உள்வட்டம், விருகல்பட்டி வருவாய் கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
பல்வேறு தேவைகளுக்காக, விவசாயிகள் அடங்கல், உரிமைச்சான்றை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பெறுகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இச்சான்றுகள் வழங்கப்படுவதில்லை.
இதற்கான பதிவேடுகள், உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லபட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உரிய நேரத்தில் சான்றுகள் பெற முடியாததால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.