/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடையில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்
/
சாக்கடையில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்
ADDED : மார் 15, 2025 11:51 PM

திருப்பூர்: தொடர் விலை சரிவை சந்தித்து வரும் தக்காளி, நேற்று கிலோ, ஒன்பது ரூபாய்க்கு விற்றது.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து பத்து நாட்களாக குறையாமல், அதிகரித்தே காணப்படுகிறது.
தினசரி, 100 - 125 டன் தக்காளி வந்து குவிவதால், மொத்த விலையில் கிலோ, 10 - 12 ரூபாய், நான்கு கிலோ, 50, எட்டு கிலோ, 100 ரூபாய், சில்லறை விலையில் கிலோ, 12 - 15 ரூபாய், காய்கறி, மளிகை கடைகளில் கிலோ, 18 - 20 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.
வெளிமார்க்கெட்டில் விலை குறைந்தாலும், முதல் தர தக்காளி வருகையால், உழவர் சந்தையில், தக்காளி விலை கிலோ பத்து ரூபாய்க்கும் கீழ் குறையாமல் இருந்தது.
இருப்பினும், நான்கு நாட்களுக்கு மேலாக விற்பனை குறைவு, தக்காளி அதிகம் தேக்கமாவது உள்ளிட்ட காரணங்களால், நேற்று தக்காளி கிலோ, ஒன்பது ரூபாய்க்கு வந்தது.
சந்தையில் தக்காளி விலை குறைவால், விற்பனை கொண்டு சென்றால் லாபம் கிடைக்காது என எண்ணிய வியாபாரிகள் சிலர் தக்காளியை அப்படியே சாக்கடை கால்வாய், ஓடையில் கொட்டிச் சென்றதை காண முடிந்தது.