/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைமடை வரை பி.ஏ.பி., நீர்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கடைமடை வரை பி.ஏ.பி., நீர்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கடைமடை வரை பி.ஏ.பி., நீர்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கடைமடை வரை பி.ஏ.பி., நீர்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 27, 2025 11:40 PM

திருப்பூர்; திருப்பூர், வீரபாண்டி பிரிவு பி.ஏ.பி., பாசன நீரைப் பயன்படுத்துவோர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
வஞ்சிபாளையம் கரிய காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு, சங்கதலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். ஆட்சி மண்டல குழு உறுப்பினர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.
வரும், நான்காவது மண்டல பாசனத்துக்கு தேவையான, உரிய நீரை முறையாக கடைமடை விவசாயிகள் வரை பாசனம் செய்ய வசதியாக உரிய நீரை பொதுப்பணித்துறையிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாசன பகுதிக்கு இந்த முறை அணையில் போதிய தண்ணீர் உள்ள காரணத்தால் தேவையான தண்ணீரை விவசாயம் செய்ய ஏதுவாக, ஐந்து சுற்று தண்ணீரையும் முழுமையாக வழங்க வேண்டும்.
கிளை வாய்க்காலில் அமைந்துள்ள பைப் லைன்கள் மற்றும் முட்புதர்களை சுத்தம் செய்ய சங்கத்தின் நிதியைப் பயன்படுத்துவது; பாசனப் பகுதியில் உள்ள அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பாசன சங்கங்களுக்கு வாய்க்கால் துார் வாரவும், பழுதான மதகுகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்க வேண்டும்.
சங்கத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவது; ஆனைமலை- நல்லாறு திட்டத்தை அரசு விவசாயிகள் நலன் கருதி விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.