/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி மாதத்தில் மழை; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ஆடி மாதத்தில் மழை; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 17, 2025 10:48 PM
பொங்கலுார்; திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழை சரிவர பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை நம்பி உள்ளனர். மேய்ச்சல் நிலங்கள் கருகி விட்டதால் கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க விவசாயிகள் வைக்கோல், கழிவுப்பஞ்சு, அடர் தீவனம் உள்ளிட்டவற்றை விலைக்கு வாங்கி கொடுத்து வருகின்றனர். தீவன செலவு அதிகரிப்பால் கால்நடை வருமானம் குறைந்துவிட்டது.
ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும் ஆனால் அது திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது.
அதே போல இந்த ஆண்டும் மழை பெய்தால் கால்நடைகளை வறட்சியிலிருந்து காப்பாற்றவும், தீவனச் செலவை குறைக்கவும் இயலும். எனவே, விவசாயிகள் ஆடி மாத மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

