ADDED : டிச 13, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வரும் 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், விவசாயிகளின் குறைகளை கேட்கிறார். திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா விவசாயிகள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளை தெரிவிக்கலாம்.