/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : அக் 23, 2024 12:15 AM
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும், 25ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, அறை எண் 240ல் உள்ள கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கிறது.
அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்குமாறும், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கலாம்.
மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட, வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது.
வேளாண் துறை சார்ந்த கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.