/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 17, 2025 09:52 PM
உடுமலை; இன்று நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் கோட்ட அளவில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையில், இன்று (18ம் தேதி) காலை, 10:30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களினால், குறை தீர் கூட்டம் நடக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டு, வரும் 25ம் தேதி, காலை நடக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.