/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 12ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
வரும் 12ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : மே 10, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், வனத்துறை சார்பில், வரும் 12ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.
வனத்துறை சார்பில், வன எல்லை கிராமங்களில் தொடரும் பாதிப்புகள், வன விலங்குகளால் பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகள் பங்கேற்கும் குறை தீர் கூட்டம் நடத்த வேண்டும், என விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில், வரும் 12ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, துணை இயக்குனர் ராஜேஷ் தலைமையில் நடக்கிறது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்குறுமாறு, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

