/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 30ல் நடக்கிறது
/
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 30ல் நடக்கிறது
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 30ல் நடக்கிறது
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 30ல் நடக்கிறது
ADDED : ஜன 23, 2026 05:55 AM
உடுமலை: திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 30ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும், 30ம் தேதி, காலை 10:30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண், 240ல் நடக்கிறது.
இதில், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க உதவும் வகையில், வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்ட, வேளாண் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்யப்படும்.
அதோடு, வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால், கருத்துக்காட்சியும் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

