/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : பிப் 05, 2025 11:15 PM
உடுமலை: உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது.
உடுமலை பகுதியில், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை வனச்சரக எல்லை கிராமங்களில், வன விலங்குகள், காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்குகளால் ஏற்படும் விளை நிலங்கள், பயிர்கள் சேதம், நிவாரணம் வழங்குதல், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கும் வகையில், நாளை (7ம் தேதி) காலை, 10:30 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடக்கிறது.
இதில், விவசாயிகள் பங்கேற்குமாறு, உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.