ADDED : செப் 02, 2025 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும், 10ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, 20ல் நடக்கிறது. இக்கூட்டத்தில், அனைத்து அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுண்ணீர் பாசனம் அமைக்க, விவசாயிகளுக்கு உதவும் வகையில், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட வேளாண் உதவி மையம் அமைக்கப்பட்டு, உரிய தகவல்கள் வழங்கப்படும்.
உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு பதிவு செய்து தரப்படுவதோடு, வேளாண் சார்ந்த கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.