ADDED : செப் 02, 2025 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக பாலக்காடு - திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் -மதுரை, கோவை - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் பல்வேறு நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். மக்களின் பாதுகாப்பு கருதியும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.