/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்திக்கு நிலையான விலை தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
/
பருத்திக்கு நிலையான விலை தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
பருத்திக்கு நிலையான விலை தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
பருத்திக்கு நிலையான விலை தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 10:16 PM
உடுமலை;நடப்பு சீசனில், பருத்திக்கு நிலையான விலை கிடைக்க, வேளாண்துறை வாயிலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு முன்பு, பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது.
மிக நீண்ட இழை மற்றும் மத்திய ரக இழை பருத்தி ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு, நுாற்பாலைகள் தேவைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.
பருத்தி சாகுபடியில், புதுவிதமான நோய்த்தாக்குதல், மண்டல பாசன நாட்கள் குறைக்கப்பட்டது மற்றும் அறுவடை சீசனில் விலை கிடைக்காதது ஆகிய காரணங்களால், சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க, மத்திய அரசு சில மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு சீசனில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், மானாவாரியாகவும், மண்டல பாசனத்துக்கும் குறைவான பரப்பில், பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர் மழையால் செடிகளில் சில பாதிப்பு இருந்தாலும், நிலையான விலை கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: பருத்தி சாகுபடியில், தொடர் மழை காரணமாக, மகசூல், குறைந்துள்ளது. எனவே, நடப்பு சீசனில், நிலையான விலை கிடைக்க, அரசு வேளாண்துறை வாயிலாக உதவ வேண்டும்.
மத்திய பருத்திக்கழகம், பருத்தி ரகங்களுக்கு, நிர்ணயிக்கும் ஆதார விலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினால், விலை நிர்ணயிக்க உதவியாக இருக்கும்.
வேளாண்துறையினர், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், பருத்தி விலை நிலவரம் குறித்த தகவல்களை பகிர்ந்தால், நடப்பு சீசனில், பயனுள்ளதாக இருக்கும். அடுத்த சீசனிலும், சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.