/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளரி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்
/
வெள்ளரி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 22, 2026 05:02 PM

உடுமலை: கோடை சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், உடுமலை வட்டார விவசாயிகள் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு பல்வேறு காய்கறி சாகுபடிகள், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
சில ஆண்டுகளாக, கோடை சீசனை இலக்காக வைத்து, தர்பூசணி, வெள்ளரி சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.
ராகல்பாவி சுற்றுப்பகுதிகளில், களிமண் விளைநிலங்களில் நடப்பு சீசனில், பரவலாக வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'பந்தல் அமைக்காமல் நேரடியாக விளைநிலத்தில், வெள்ளரி கொடியை படர விட்டுள்ளோம். ஏக்கருக்கு, ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக விளைச்சலை எதிர்பார்த்துள்ளோம். உள்ளூர் சந்தைகளிலேயே விற்பனை செய்து வருகிறோம். விலை கைகொடுத்தால், இச்சாகுபடியில் லாபம் கிடைக்கும்,' என்றனர்.

