/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெப்பம் தணிக்கும் நுங்கு விற்பனை ஜோர்
/
வெப்பம் தணிக்கும் நுங்கு விற்பனை ஜோர்
ADDED : மார் 22, 2026 05:02 PM

உடுமலை: கோடை வெயிலை சமாளிக்க, பல்வேறு பகுதிகளில் இருந்து, நுங்கு மற்றும் பதநீர் தருவிக்கப்பட்டு, உடுமலையில் விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை பகுதியில், இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியுள்ளது. வெப்பத்தை தணிக்க, இளநீர், தர்பூசணி, கம்மங்கூழ் வரிசையில் நுங்கு மற்றும் பதநீருக்கு முக்கிய இடமுள்ளது.
இப்பகுதியில், பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீசன் சமயங்களில், பிற மாவட்டங்களில் இருந்து நுங்கு மற்றும் பதநீர் உடுமலை பகுதியில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
நுங்கு, பத்து ரூபாய்க்கும், பதநீர் ஒரு சொம்பு, ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து சீராக இருப்பதால், விலை தற்போது உயரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

