/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் ஊடுபயிராக பாக்கு; விவசாயிகள் ஆர்வம்
/
தென்னையில் ஊடுபயிராக பாக்கு; விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 02, 2025 11:23 PM
பொங்கலுார்: மாவட்டத்தில் பல் வேறு தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் அதிக இடைவெளி உள்ளது. அதில் தேவையற்ற களைகள் முளைக்கின்றன. அதை அழிக்க பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளது. களைக்கொல்லி தெளிப்பதால் அதிக பொருட்செலவுடன் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
செலவை கட்டுப்படுத்தவும், வருமானத்தை மேலும் அதிகரிக்கவும் விவசாயிகள் பாக்கை ஊடுபயிராக சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
முன்பு இப்பகுதிகளில் பாக்கு சாகுபடி அரிதாகவே இருந்தது. தென்னையில் ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்வதன் மூலம் நிழல் அதிகரிக்கும். இதனால் களைகள் மட்டுப்படும். பாக்கு, தென்னை ஆகிய இரண்டிலும் வருமானம் ஈட்ட முடியும்.