/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடரும் தெரு நாய்கள் வெறியாட்டம் கால்நடைகளை இழக்கும் விவசாயிகள்
/
தொடரும் தெரு நாய்கள் வெறியாட்டம் கால்நடைகளை இழக்கும் விவசாயிகள்
தொடரும் தெரு நாய்கள் வெறியாட்டம் கால்நடைகளை இழக்கும் விவசாயிகள்
தொடரும் தெரு நாய்கள் வெறியாட்டம் கால்நடைகளை இழக்கும் விவசாயிகள்
ADDED : பிப் 27, 2026 06:11 AM

திருப்பூர்: தெருநாய்களை கட்டுப்படுத்த மெத்தனம் காட்டப்படுவதால், தெருநாய்களின் வெறியாட்டத்துக்கு கால்நடைகள் பலியாவது தொடர்கிறது.
திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஆடு உள்ளிட்ட கால்நடைகள், தெருநாய்களால் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. கால்நடைகளை இழந்தோருக்கு இழப்பீடு தொகையாக, தமிழக அரசு, முதல் கட்டமாக, 42 லட்சம் ரூபாய், இரண்டாம் கட்டமாக, 65 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. மூன்றாம் கட்ட தொகை விடுவிக்கப்பட உள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்த அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. அவற்றின் வெறியாட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆங்காங்கே கூட்டமாக மேயும் ஆடுகளை விரட்டி, தாக்கி கடிக்கின்றன.நேற்று முன்தினம், திருப்பூர் மாவட்டம், காங்கயம், வீராணம்பாளையம், பட்டக்காரன்புதுாரில், சண்முக சேது ராமசாமி என்பவருக்கு சொந்தமான, 9 ஆடுகள், நாய் கடிபட்டு இறந்துள்ளன; 9 ஆடுகள் காயமடைந்தன. காங்கயம், உத்தாம்பாளையம் பகுதியில், முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள், நாய் கடிக்கு ஆளாகி பலியாகியுள்ளன; 2 ஆடுகள் காயமடைந்துள்ளன.
பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
தெருநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்' என்ற போதிலும், தெரு நாய்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் மெத்தனம் காண்பிக்கின்றன; இதனால், உயிரிழப்புகளும் தொடர்கின்றன.
இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும். சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டும்.
முதல்வர் நிவாரண நிதியில் அல்லாமல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பிரத்யேக நிதி ஆதாரத்தின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம், என்றார்.

