/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை விரிவாக்கம் தேவை நெருக்கடியால் தொடர்பாதிப்பு
/
உழவர் சந்தை விரிவாக்கம் தேவை நெருக்கடியால் தொடர்பாதிப்பு
உழவர் சந்தை விரிவாக்கம் தேவை நெருக்கடியால் தொடர்பாதிப்பு
உழவர் சந்தை விரிவாக்கம் தேவை நெருக்கடியால் தொடர்பாதிப்பு
ADDED : ஏப் 28, 2025 05:48 AM

உடுமலை : 'உடுமலை உழவர் சந்தையில், இடநெருக்கடி மற்றும் வாகனங்களை நிறுத்த இடமில்லாதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என இரு தாலுகா விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே கபூர்கான் வீதியில், உழவர் சந்தை கடந்த, 2000ல், திறக்கப்பட்டது. நாள்தோறும், 30 டன் வரை காய்கறி வரத்து உள்ளது. அதிகளவு நுகர்வோரும் சந்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தைக்குள் இடநெருக்கடி காரணமாக, நுகர்வோர், விவசாயிகள் என இரு தரப்பினரும் பாதிக்கின்றனர்.
மேலும் சந்தை அருகே, ரோட்டோரத்தில், அமைக்கப்படும், கடைகளால், அவ்வழியாக காலை நேரத்தில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
போக்குவரத்து நிறைந்த ரோட்டில், உழவர் சந்தைக்கு வருபவர்கள், வாகனங்களை நிறுத்தவும், போதிய இடம் கிடைப்பதில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் அனுப்பியுள்ள மனு: உடுமலை உழவர் சந்தையை விரிவுபடுத்தி, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, சந்தைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த, இடம் ஒதுக்க வேண்டும்.
இதற்கான ஆய்வுப்பணிகளை, வேளாண்துறை தலைமையிலான குழுவினர் செய்து, அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கை வாயிலாக, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.