/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலியாகும் கால்நடைகள் பரிதவிக்கும் விவசாயிகள்
/
பலியாகும் கால்நடைகள் பரிதவிக்கும் விவசாயிகள்
ADDED : ஏப் 14, 2025 05:42 AM
திருப்பூர் : வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், ஈரோடு சென்னிமலை சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கால்நடை வளர்ப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் என்ற நிலையில், இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்; ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா, சாலை மறியல் என, தங்களின் எதிர்ப்பை மிக அழுத்தமாக பதிவு செய்து வந்தனர்.
அதன் விளைவாக, தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு, கோழி, மாடுகளுக்கு, மாநில அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, கால்நடைகள் பலியாவதால் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்பு, பிரச்னையின் தீவிரம் உணரப்பட்டுள்ளதாக, விவசாயிகள் ஆறுதல் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம், தெரு நாய்க்கடியால் இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது; தினசரி இச்சம்பவம் நடக்கிறது. மாவட்ட நிர்வாகமோ, உள்ளாட்சி நிர்வாகங்களோ, ஆடுகளை தாக்கும் நாய்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு கருத்தடை செய்வதற்கோ, அவற்றை பிடித்து எங்கேனும் கொண்டு சென்று விடுவதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாமல் இருப்பது, கவலையளிக்கிறது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

